திரு. மணி, வணக்கம்.
லிப்ரெஓபிஸ் ("லிபோ") இலக்கணப்பிழை திருத்தியைச் சோதித்துப் பார்த்ததற்கு
நன்றி.
அதனை நிறுவிப் பயன்படுத்துவதற்கான வழிமுறை பின்வருமாறு:
1) லிபோவை http://ta.libreoffice.org/download/libreoffice-fresh/
தளத்திலிருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். தமிழ் முகப்புக்கு 'custom
install' செய்ய வேண்டும். தமிழ் 'Additional user interface languages' கீழ்
கொடுக்கப்பட்டிருக்கும். நிறுவிய பின்னர், லிப்ரெஓபிஸைத் திறந்து tools >
Options > Language Settings > Languages சொடுக்குங்கள். அங்கு பயனர் முகப்பு,
'Complex Text Layout' ஆகியவற்றைத் தமிழுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
2) இலக்கணப்பிழை திருத்திக்கு ஜாவா தேவை. அதனை
http://www.java.com/en/download/manual.jsp தளத்திலிருந்து பெற்று நிறுவிக்
கொள்ளுங்கள். 32 பிட் பதிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
3) இப்போது இலக்கணப்பிழை திருத்தியை ஒரு நீட்சியாக நிறுவலாம். முதலில்
https://languagetool.org/download/snapshots/ தளத்தில் ஆகக் கடைசியாக
ஏற்றப்பட்டுள்ள ஒ.எக்ஸ்.டி கோப்பைப் பதிவிறக்கி நிறுவுங்கள். பதிவிறக்கிய
கோப்பை இருமுறை சொடுக்கியதும், லிபோ அதனைத் திறந்து ஒரு நீட்சியாக நிறுவ
முற்படும். "சரி" என்று சொடுக்கி உங்கள் அனுமதியைத் தாருங்கள். பொதி
நிறுவப்படும். (கணினியில் ஜாவா இல்லையெனில், இங்கு பிழை அடிக்கும்.)
4) 'லேங்குவேஜ் டூல்' சரியாக நிறுவப் பட்டிருக்கிறதா என்பதை இங்கு
பார்க்கலாம்: கருவிகள் > விருப்பத்தேர்வுகள் > மொழி அமைவுகள் > எழுதும்
உதவிகள் > தொகு > தமிழ். அங்கு இலக்கணம் என்ற தலைப்பின் கீழ் தென்படும்
'லேங்குவேஜ் டூல்' தேர்வுசெய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
நீண்ட விளக்கம் அளித்தமைக்கு மன்னிக்கவும். மற்றவர்களுக்கும் இவ்விளக்கம்
தேவைப்படலாம் என்பதற்காக எழுதினேன்.
நட்புடன்,
வே. இளஞ்செழியன்
பி.கு.: லேங்குவேஜ் டூல், தற்போது தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு இந்திய
மொழிகளில் மட்டுமே தற்போது கிடைக்கிறது.
2014-08-11 4:05 GMT+08:00 Mani Manivannan <mmanivannan@gmail.com>:
இன்று இதைப்
( LanguageTool-20140809-snapshot.oxt
<https://languagetool.org/download/snapshots/LanguageTool-20140809-snapshot.oxt> 09-Aug-2014
22:0346M )
பதிவிறக்கி நிறுவியுள்ளேன். ஆனாலும் என்னுடைய பட்டியலில் தமிழ் இல்லை.
இந்தியும் தெலுங்கும் தெரிகின்றன. இன்றைய நீட்சியில் தமிழை
விலக்கியுள்ளீர்களா?
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
On Tuesday, July 29, 2014 5:43:32 AM UTC+5:30, Ve. Elanjelian wrote:
நண்பரே, வணக்கம்.
எனது முந்தைய மடலில் லிப்ரெஓபிஸில் இயங்கும் இலக்கணப்பிழைத் திருத்தி ஒன்றை
மேம்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடக்கக் கட்ட வெளியீடு
இப்போது பயனர் சோதனைக்குத் தயாராக இருக்கிறது.
இத்திருத்திக்கு இதுவரை மொத்தம் ஒன்பது இலக்கண விதிகள் கற்பிக்கப்பட்டுள்ளன.
அவை:
1. ஓரெழுத்துப் பெயர்ச்சொல்லின் பின் வல்லெழுத்து வந்தால், வல்லெழுத்து
மிகும்;
2. 'அந்த', 'இந்த', 'எந்த' முதலிய பெயரடைகளின் பின்பு ஒற்று மிகும்;
3. 'போக', 'வர', போன்ற செய்ய என்னும் வினையெச்சங்களின் பின் ஒற்று
மிகும்;
4. 'சரிவர', 'போல' போன்ற வினையடைகளின், இடைச்சொற்களின் பின் ஒற்று
மிகும்;
5. 'ஆக' என்ற வினையடை விகுதியின் பின் ஒற்று மிகும்;
6. 'சின்ன' என்னும் பெயரடை ஒற்று ஏற்கும்;
7. 'ஓடி' போன்ற ('செய்து' என்னும்) வினையெச்சத்தின் பின் ஒற்று மிகும்;
8. 2 ஆம் வேற்றுமை உருபாகிய 'ஐ' பின் ஒற்று மிகும்; மற்றும்
9. 4 ஆம் வேற்றுமை உருபாகிய 'கு' பின் ஒற்று மிகும்.
இத்திருத்தியில் 2,000 பெயர்ச்சொற்களையும் 1,000 வினைச்சொற்களையும் மட்டுமே
சேர்த்துள்ளேன்; ஆகவே, இத்திருத்தி அனைத்து தவறுகளையும் கண்டறியாது.
இத்திருத்தி லிப்ரெஓபிஸில் ஒரு நீட்சியாகச் செயல்படுகிறது. அந்நீட்சியின்
இரவுப் பதிப்பு (nightly build) இங்கு கிடைக்கும்:
https://languagetool.org/download/snapshots/?C=M;O=D
அத்தளத்திலிருந்து “.oxt” என்ற கோப்பு வகையைத் தேர்வு செய்யுங்கள். அதனை
லிப்ரெஓபிஸ் திறக்கும். (உங்கள் கட்டகத்தில் ஜாவா இல்லையெனில், அதனை
இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளவும்: http://www.oracle.com/
technetwork/java/javase/downloads/jre8-downloads-2133155.html – விண்டோஸ்
பயனர்கள் 32 பிட் பொதியைப் பதிவிறக்கவும்.)
இத்திருத்தியை 'லேங்குவேஜ் டூல்' அகப்பக்கத்திலும் சோதித்துப் பார்க்கலாம்.
தொடுப்பு: https://languagetool.org/ (இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள
பதிப்பு சில நாட்களுக்கு முன்னர் செய்யப்பட்டது; ஆதலால், அதில் மேலே சொன்ன
முதல் ஐந்து விதிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.)
இத்திட்டத்தின் மேம்பாட்டுத் தளம் இங்கிருக்கிறது:
https://github.com/thamizha/thamizha-ilakkanam . நீங்கள் கண்டுபிடிக்கும்
வழுக்களை இங்கு சுட்டிக்காட்டுங்கள். வெறென்ன புதிய விதிகளைச் சேர்க்கலாம்
என்றும் சொல்லுங்கள்.
நட்புடன்,
வே. இளஞ்செழியன்
--
You received this message because you are subscribed to the Google Groups
"ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to freetamilcomputing+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to freetamilcomputing@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/freetamilcomputing.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
To unsubscribe e-mail to: discuss+unsubscribe@ta.libreoffice.org
Problems? http://www.libreoffice.org/get-help/mailing-lists/how-to-unsubscribe/
Posting guidelines + more: http://wiki.documentfoundation.org/Netiquette
List archive: http://listarchives.libreoffice.org/ta/discuss/
All messages sent to this list will be publicly archived and cannot be deleted
Context
Privacy Policy |
Impressum (Legal Info) |
Copyright information: Unless otherwise specified, all text and images
on this website are licensed under the
Creative Commons Attribution-Share Alike 3.0 License.
This does not include the source code of LibreOffice, which is
licensed under the Mozilla Public License (
MPLv2).
"LibreOffice" and "The Document Foundation" are
registered trademarks of their corresponding registered owners or are
in actual use as trademarks in one or more countries. Their respective
logos and icons are also subject to international copyright laws. Use
thereof is explained in our
trademark policy.